எலவனாசூர்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 790 மண்பானைகளில் முளைப்பாரி எடுத்து உலக சாதனை...

11 August 2025

எலவனாசூர்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 790 மண்பானைகளில் முளைப்பாரி எடுத்து உலக சாதனை... 


கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் உலக சாதனை 790 மண் பானைகளில் முளைப்பாரி  எடுத்து மண்பானைகளில் தேசியக்கொடி வண்ணமிட்டு மண் பானைகளில் திருக்குறள் எழுதி தேசிய கொடி வடிவில் காட்சிப்படுத்தியதற்கு புதுச்சேரி அனைத்திந்திய உலக சாதனை புத்தக பல்கலைக்கழகம் பதிவு செய்து உலக சாதனை பெற்றதற்கான பாராட்டு சான்றிதழ் வழங்கியது...

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் உலக சாதனை படைத்துள்ளனர் இந்திய தேசத்தின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 790 மண்பானைகளில் முளைப்பாரி எடுத்து பானைகளில் ஆரஞ்சு வெள்ளை பச்சை நீளம் ஆகிய தேசிய கொடி வண்ணமிட்டு தேசியக்கொடி வடிவேல் வைத்து நடுவில் நீல நிறத்திலான மண்பானைகளை அசோகச் சக்கரம் போல் வரைந்து அசத்தினர் மாணவர்களின் இந்த செயலுக்கு புதுச்சேரி அனைத்திந்திய உலக சாதனை புத்தக பல்கலைக்கழகம் நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டு மாணவிகளின் இந்த செயலுக்கு பாராட்டு சான்று வழங்கி உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதாக பாராட்டி பேசினர் இதில் வேலூர் தமிழ் சங்கர் நிர்வாகிகள் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவிகள் உட்பட பலரும் கலந்து கொண்டு மாணவிகளுக்கு ஊக்கமளித்தனர் மாணவிகளின் இந்த சாதனை புரிய கடந்த மூன்று மாதமாக மண்பாண்டம் முளைப்பாரி மற்றும் மண் பானையில் வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு இந்த சாதனை புரிந்ததாக கூறிய புதுச்சேரி உலக சாதனை புத்தக பல்கலைக்கழகத்தின் தலைவர் வெங்கடேசன் கூறினார் தொடர்ந்து கல்வி மற்றும் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும் மாணவர்கள் போதை பழக்கத்தில் இருந்து விடுபடவும் வலியுறுத்தும் வகையில் 790 மண்பானைகளிலும் கற்க கசடற கற்பவை நிற்க அதற்குத் தக என்ற திருக்குறள் வாசகத்தை எழுதி உள்ளதையும் குறிப்பிட்டு கூறினார்...

சப் எடிட்டர்,  இரா.வெங்கடேசன்