புதிய உச்சத்தை தொட்ட முட்டை கொள்முதல் விலை

14 December 2025

நாமக்கல்லில் இருந்து தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படும் நிலையில், அவை அனைத்தும் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

இந்த நிலையில் முட்டை கொள்முதல் விலை 6.15 காசுகளாக நேற்று முன்தினம் இருந்து வந்தது. இந்த விலையானது ஐந்து காசுகள் உயர்ந்து 6.20 காசுகளாக வழங்கப்பட்டது. ஆனால் இன்று மேலும் 5 காசுகள் உயர்ந்து முட்டை கொள்முதல் விலை 6.25 காசுகளாக கொள்முதல் செய்யப்படுகிறது. 


இது வரலாறு காணாத விலை  உயர்வு ஆகும்.
தொடர்ந்து முட்டையின் விலை அதிகரித்து வருவது மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது....