திருத்தணியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எனும் பிரச்சாரம் இன்று நடைபெற்றது.
இதில் தொண்டர்களிடையே பேசிய எடப்பாடி பழனிச்சாமி அடுத்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார். அதிமுக கூட்டணி 24 இடங்களில் வெல்லும் என தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி திமுக தேர்தல் அறிக்கையில் ஒரு குவின்டால் நெல்லுக்கு 2500 ரூபாய் ஆதார விலை ஒரு டன் கரும்புக்கு 4000 ரூபாய் கொடுப்பதாக சொன்னார்கள் ஆனால் கொடுக்கவில்லை என தெரிவித்தார்.
மேலும் விவசாயிகளுக்கு திமுக அரசு துரோகம் செய்துள்ளதாக தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.