முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
இப்போது பேசிய அவர் செங்கோட்டையன் திமுகவின் பி.டி.மாக செயல்பட்டார் கட்சி விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்த செங்கோட்டையன் ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை என தவறான கருத்தை கூறினார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதை விளக்கிய போது அவர் ஏற்கவில்லை. மேலும் செங்கோட்டையன் கடந்த ஆறு மாதமாக கட்சிக்கு எதிராக தான் இருந்தார். கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் இணைந்து செயல்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்சிக்கு துரோகம் செய்தால் இதுதான் நிலைமை. அதிமுக தலைமைக்கு எதிராக செயல்பட்டால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என தெரிவித்தார்.