அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பொய்யான வாக்குறுதிகளை அளித்த மக்களை ஏமாற்றி 54 மாதங்களுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியில் ஆட்சி என்று ஒன்று இருக்கிறதா என தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில் காவல்துறை என்று ஒன்று செயல்படுகிறதா என்றே தெரியவில்லை என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, சிறுமிகள் மூதாட்டிகள் வரை யாரும் வெளியில் சுதந்திரமாக சூழ்நிலை ஏற்பட்டுள்ளது கொடுமையின் உச்சம் என தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம் என்று கூறிய ஸ்டாலினை நிர்வாக திறன் அற்ற விடியா திமுக ஆட்சி சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.