தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது ஒட்டி வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவும் படி அதிமுகவினருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவருடைய சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த நேரத்தில் பொது மக்களுக்கு தேவையான உதவிகளை அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் மேற்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.