துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் இரண்டு நாட்கள் பயணமாக தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.
அவர் சென்னை எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் 34வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் பொது வரவேற்பு விழாவிலும் அவர் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் சென்னை கிண்டி பகுதியில் உள்ள லோக் பவனில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி துணை ஜனாதிபதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். மேலும் அவர் ஜனாதிபதிக்கு பூங்கொத்து அளித்து வரவேற்பு அளித்தார்...