முகப்பு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு - முதல்வர் கவலைப்படுவதில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு."
சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் திமுக அரசை "கையாலாத அரசு" என விமர்சித்த அவர், 100 நாள் வேலைத் திட்டத்தில் தொழிலாளர்களுக்குச் சரியான முறையில் சம்பளம் கூட வழங்க முடியவில்லை எனக் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. திருத்தணியில் வடமாநிலத் தொழிலாளரைச் சிறுவர்கள் தாக்கிய சம்பவத்தை உதாரணமாகக் கூறி, போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.