குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியா??

22 December 2025

குளிர்காலங்களில் நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளில் பிரச்சனைகளில் ஒன்றுதான் சரும வறட்சி. இது குளிர்ந்த மற்றும் வறண்ட காற்று காரணமாக நமது தோலில் ஏற்படும் ஒரு வறட்சியாகும். காற்றில் ஈரப்பதம் குறைவாக இருப்பதால் நமது சருமம், நீரிழிப்பு ஏற்பட்டு வறண்டு போய் விடுகிறது. 

அதேபோன்று குளிர்காலங்களில் சூடான நீரில் குளிப்பதன் காரணமாக சருமத்தின் இயற்கையான ஈரப்பதம் அகற்றப்பட்டு வறட்சி அதிகமாகிறது. மேலும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் இல்லாமல் போனாலும் இந்த வறட்சி ஏற்படும். 

வரட்சியின் காரணமாக தோல் அலர்ஜி மற்றும் சொரியாசிஸ் போன்ற தோல் நோய்கள் தீவிரமடைய வாய்ப்புள்ளது. 

இதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நமது உடலில் தேங்காய் எண்ணெயை தடவினால் மிகவும் நல்லது. இனிப்பாக காலையில் குளித்த பிறகு தேங்காய் எண்ணெயை தடவும் போது நமது சருமம் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. 

மேலும்  இதற்காக ஏராளமான மாய்ஸசரைசிங் கிரீம்கள் விற்பனைக்கு வந்துள்ளன. அவற்றின் ரேட்டிங்குகளையும், ம்திப்பாய்வுகளையும் பார்த்து ஆய்வு செய்து அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் மிகச் சூடான நீரை தவிர்த்து மிதமான சூடான நீரில் குளித்தால் இந்த பிரச்சனையில் இருந்து நாம் விடுபடலாம். மேலும் தண்ணீரை நாம் போதுமான அளவு உட்கொள்ள வேண்டும். 

இந்தப் பிரச்சனையை நமக்கு அதிகரிக்கும் பட்சத்தில் அதிக அளவிலான சரும வளர்ச்சி ஏற்பட்டால் நமக்கு அதிகமான அரிப்பும் ஏற்படும். அவ்வாறு தாங்க முடியாத அளவிற்கு சரும அரிப்பு ஏற்பட்டால் உடனடியாக தோல் மருத்துவரை அணுகுவது நல்லது...