பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு
24 October 2025
விழுப்புரம் பூந்தோட்டம் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு
விழுப்புரத்தில், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பூந்தோட்டம் நகராட்சி பள்ளியில், இன்று அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை, அப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, உதவி ஆய்வாளர் சுதன் தலைமையில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் தலைமையாசிரியர், ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் மாணவர்கள் ஆர்வத்தோடு நிகழ்வில் பேசியதை கேட்டனர்.