75 கிலோ குட்கா பறிமுதல்
24 October 2025
விழுப்புரம்: 75 கிலோ குட்கா பறிமுதல்
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் இ.கா.ப., உத்தரவின்படி திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், அரசூர் கூட்ரோடு அருகே வந்த TN 31 AK 2613 என்ற Ashok Leyland Dost வாகனத்தில் 75 கிலோ எடை கொண்ட, ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்புடைய கடத்தல் வழக்கில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் (33) கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.