மராட்டியத்தில் ரூ. 2.15 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

14 February 2026

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் தும்பிவாலி பகுதியில் போலீஸார் நடத்திய அதிரடி வாகன சோதனையில், சுமார் 2.15 கோடி ரூபாய் மதிப்பிலான கொக்கைன் மற்றும் மெப்கிடிரொன் ஆகிய போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


நேற்று இரவு வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி போலீஸார் சோதனை செய்தனர்.


அப்போது அந்த வாகனத்தில் இருந்த 3 பேர் போலீஸாரைக் கண்டதும் தப்பியோட முயன்றனர். அவர்களை விரட்டிப் பிடித்த போலீஸார் நடத்திய விசாரணையில், போதைப்பொருள் கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது. இதில் கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்துள்ள போலீஸார், இது தொடர்பாகப் பின்தொடர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.