எல்லையில் ட்ரோன் நடமாட்டம்: பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை

13 January 2026

இந்திய-பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுப் கோடு (LoC) பகுதிகளில் அதிகரித்து வரும் ட்ரோன் ஊடுருவல்கள் குறித்து இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி பாகிஸ்தானுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.


எல்லைப் பகுதிகளில் ட்ரோன்கள் தென்படுவது இந்தியப் பாதுகாப்புக்கு விடுக்கப்படும் நேரடி சவாலாகும். இத்தகைய செயல்கள் தொடர்ந்தால், இந்தியா தகுந்த பதிலடி கொடுக்கும் என அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.



பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஏவப்படும் ட்ரோன்கள் மூலம் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்க முயற்சி நடப்பதாக ராணுவம் கருதுகிறது.


 ட்ரோன் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நவீன ஆன்டி-ட்ரோன் (Anti-drone) தொழில்நுட்பங்களை எல்லைப் பகுதிகளில் இந்தியா நிலைநிறுத்தி வருகிறது.



 குளிர்காலத்தைப் பயன்படுத்தி ஊடுருவல் முயற்சிகள் அதிகரிக்கக்கூடும் என்பதால், பாதுகாப்புப் படையினர் முழு வீச்சில் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
"எல்லைப் பாதுகாப்பு மற்றும் நாட்டின் இறையாண்மையில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளப்பட மாட்டாது. அச்சுறுத்தல்களை முறியடிக்க இந்திய ராணுவம் முழுத் தயார் நிலையில் உள்ளது." - ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி.