மக்கள் மருத்துவர் என்று அழைக்கப்பட்ட ராஜபாளையம் மருத்துவர் மறைவு !
28 October 2025
ராஜபாளையம் பகுதியில், இரண்டாம் தலைமுறையாக மருத்துவப் பணியினை அறப்பணி யாக செய்து வந்த மக்கள் மருத்துவர் கண்ணன் டாக்டர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட டாக்டர் ராஜசேகர் அவர்களின் மறைவு நகர மக்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. உள்ளோர் இல்லோர் பாகு பாடின்றி, இல்லம் தேடி மருத்துவம் பார்க்க சென்றவர் மனித நேயத்தோடு இறுதி வரை பராமரித்தவர். நெறி சார்ந்த மருத்துவ சேவை யின் இலக்கணமாக திகழ்ந்த டாக்டர் ராஜசேகர் அவர்களுக்கு ராஜபாளையம் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.