ஆந்திர மாநிலம் குண்டூர் தடிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சின்னராமுடு என்பவரது மகள் மதுரி சகிதிபாய் நந்தியால் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரை காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் ராஜேஷ் மதுரிடம் வரதட்சனை கேட்டு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து கணவன் வரதட்சனை கொடுமை செய்ததன் காரணமாக மிகவும் மன வேதனை அடைந்த மதுரி இன்று தனது பெற்றோர் வீட்டில் உள்ள கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்...