திமுக அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் யார் யார்??

04 May 2021


முதல்வராக ஸ்டாலின் வரும் 7-ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் மிகவும் எளிமையாக பதவியேற்கிறார். திமுக வென்றதும் யார் யாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்தது.


தற்போது திமுக அமைச்சரவை குறித்து உத்தேச பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் முதல்வருடன் சேர்த்து 30 அமைச்சர்கள் உள்ளனர். 30-ல் 3 பெண்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. 5 இளைஞர்களுக்கு முதல்முறையாக அமைச்சர் பதவி வழங்கப்படுகிறதாம். முன்னாள் அமைச்சர்களுக்கும் பதவி வழங்கப்பட உள்ளது .

துரைமுருகன் – சபாநாயகர்

சக்கரபாணி – துணை சபாநாயகர்

முதல்வர் ஸ்டாலின் வசம் பொதுபணித்துறை, ஐஏஎஸ், ஐபிஎஸ் நிர்வாகம், ஐஎஃப்எஸ், மாவட்ட வருவாய் அதிகாரிகள், காவல் துறை , உள்ளாட்சி, லஞ்ச ஒழிப்புத் துறை, துணை ஆட்சியர்கள் உள்ளிட்ட துறைகள்.

நிதித் துறை, திட்ட கமிஷன், கலால் துறை, வருவாய் துறை – பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

மின்சாரத் துறை – ஐ.பெரியசாமி.

பொதுப் பணித் துறை, வீட்டு வசதி, ஊரக வீட்டு வசதி, வீட்டு வசதி வளர்ச்சி, குடிசை வாரியம் – கே. என்.நேரு.

உயர் கல்வித் துறை – க.பொன்முடி.

பள்ளிக் கல்வித் துறை – தங்கம் தென்னரசு.

வேளாண் துறை – எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்.

உணவு மற்றும் வழங்கல் துறை – எ.வ.வேலு.

நெடுஞ்சாலை துறை மற்றும் துறைமுகங்கள் – வெள்ளக்கோயில் சாமிநாதன்.

சட்டத் துறை, பேரிடர் மேலாண்மை – மா சுப்பிரமணியன்.

தொழிற்துறை,சுரங்கத் துறையும் – எஸ் முத்துசாமி.

பால்வளத் துறை – கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்.

கூட்டுறவுத் துறை – ராஜேந்திரன்.

தமிழக ஆட்சி மொழி மற்றும் தமிழ் கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறை – கு பிச்சாண்டி.

சுகாதாரத் துறை மற்றும் குடும்ப நலம் – டாக்டர் எழிலன்

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை – உதயநிதி ஸ்டாலின்.

தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை – டிஆர்பி ராஜா.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை – அன்பில் மகேஷு.

பத்திரப்பதிவு, வர்த்தக வரி துறை – வெற்றி அன்பழகன்.

கைத்தறித் துறை – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

சுற்றுச்சூழல் துறை – கீதா ஜீவன்.

ஆதி திராவிடர் நலத் துறை – தமிழரசி.

மீன்வளத் துறை – சேகர் பாபு.

ஊரக தொழில் துறை, குடிசை மற்று்ம சிறுகுறு தொழில் துறை – ரகுபதி.

சுற்றுலாத் துறை – காதர் பாட்ஷா முத்து ராமலிங்கம்.

செய்தி மற்றும் விளம்பரத் துறை – மனோ தங்கராஜ்.

கதர் நலத் துறை – ராமசந்திரன்.

தொழிலாளர் நலத் துறை – அப்துல் வகாப்.

இந்து சமய அறநிலையத் துறை – அனிதா ராதாகிருஷ்ணன்.

பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் நலத் துறை, வெளிநாடு வாழ் இந்தியர் துறை – வரலட்சுமி.