திருச்சி திமுக மாநாடு: புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் முதல்வர்
08 March 2026
திருச்சி சிறுகனூரில் மார்ச் 9-ஆம் தேதி 'ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்' என்ற பெயரில் திமுகவின் பிரம்மாண்ட மாநாடு நடைபெற உள்ளது. 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நடைபெறும் இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் பந்தல்கள் அமைக்கப்பட்டு, 3 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாகத் தேவா மற்றும் அப்துல் குத்தூஸின் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. மாலை 5.30 மணிக்கு மாநாட்டுத் திடலுக்கு வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரம்மாண்ட கொடிக்கம்பத்தில் கட்சி கொடியேற்றி தொண்டர்களின் வரவேற்பை ஏற்று மேடைக்கு வருகிறார். இந்த மாநாட்டில் பொதுமக்களுக்கும் தொண்டர்களுக்கும் பயன்படும் வகையில் பல புதிய மற்றும் முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த நிகழ்வு பெரும் அரசியல் கவனத்தைப் பெற்றுள்ளது.