தேமுதிக கட்சியின் மாவட்ட கழக செயலாளர் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமை தாங்கினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி தேமுதிக மேலும் எங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட சின்னம் முரசு தான். எனவே அந்த சின்னத்தில் தான் தேமுதிக வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவார்கள் என தெரிவித்தார்.