தேமுதிக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு விநியோகம் இன்று தொடக்கம்

06 February 2026

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்புள்ள நிலையில், தேமுதிக சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதற்கான கட்டணமாக பொதுத்தொகுதிக்கு ரூ.15,000 மற்றும் தனித்தொகுதிக்கு ரூ.10,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ள கட்சியினர் வரும் பிப்ரவரி 12-ம் தேதி வரை பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை சமர்ப்பிக்கலாம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் தற்போது திமுக, அதிமுக, தவெக மற்றும் நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டி நிலவும் சூழலில், தேமுதிகவினர் இன்று ஆர்வத்துடன் விருப்பமனுக்களை வாங்கிச் சென்றனர்.