சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு திரும்பும் மக்கள்: நெடுஞ்சாலைகளில் குவிந்த வாகனங்கள்

21 October 2025

தீபாவளி பண்டிகை முடிவடைந்து அதற்கான விடுமுறை தினங்களும் முடிவடைந்த நிலையில் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு சென்ற மக்கள் இன்று சென்னைக்கு திரும்புகின்றனர். இந்த நிலையில் சொந்த ஊருக்கு சென்றபோது எந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோ அதே அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு, உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுங்கச்சாவடிகளிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.. இதனால் சுங்கச்சாவடிகளின் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.