நாளை தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் தீபாவளி பண்டிகைக்கு தேவையான பட்டாசுகள் பூஜை பொருட்கள் புத்தாடைகள் வாங்குவதற்காக இன்று சென்னையின் முக்கிய கடைவீதியான தியாகராய நகரில் மக்கள் கூட்டம் குவிந்தது. குறிப்பாக கொட்டும் மழையிலும் ஏராளமான மக்கள் புத்தாடைகளை வாங்க குவிந்தனர். மேலும் தீபாவளி விற்பனை கடைசி தினம் என்பதால் வியாபாரிகளும் உற்சாகமாக விற்பனைகளை நடத்தி வருகின்றனர். புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வாங்க மக்கள் ஆங்காங்கே உள்ள கடைகளில் குவிந்ததால் கடும் நெரிசலும் ஏற்பட்டது.. இருப்பினும் மக்கள் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.