ஆன்மீக யாத்திரை ரயில் புறப்பாடு: கொடி அசைத்து தொடங்கி வைத்த பாஜக நிர்வாகிகள்

24 December 2025

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் சங்கம் சார்பில் ஆறு நாள் ஆன்மீக யாத்திரை இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கியது. 

இந்த ஆன்மீக யாத்திரைக்காக செல்லும் ரயில் காசி அயோத்தி மற்றும் வட இந்தியாவில் உள்ள சுற்றுலா புனித தலங்களுக்கு செல்ல உள்ளது.. 

இந்த நிலையில் இன்று இந்த ரயில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இந்த ரயிலை பாஜக மூத்த நிர்வாகிகளான தமிழிசை சௌந்தரராஜன், எச் ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியை சேர்த்து தொடங்கி வைத்தனர். 

இதில் சுமார் ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பயணிக்கின்றனர். ஆறு நாட்கள் பயணத்தில் காசி அயோத்தி மற்றும் பல புனித தலங்களுக்கு சென்று விட்டு ஆறு நாட்கள் முடிவடைந்து ரயில் மீண்டும் சென்னைக்கு திரும்பும்...