பழனி முருகன் கோவில் சொத்துக்கள் ரூ1,316 கோடி மீட்பு

05 December 2025

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான
இடங்கள் மற்றும் நிலங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கையகப்படுத்தி வைத்துள்ளனர். இதனை மீட்கும் முயற்சியில் திருக்கோவில் தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பழனி பேருந்து நிலையத்திலிருந்து கோவில் அடிவாரம் வரை 
 ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கடைகள், குடியிருப்புகள், கட்டிடங்கள், கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் ஆகியவை அகற்றப்பட்டு 329 சொத்துக்களை மீட்டுள்ளனர். இதன் மதிப்பு  சுமார்  ரூபாய் 156  கோடி ஆகும். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல், கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கோவிலுக்கு சொந்தமான  சொத்துக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2022  மே மாதம் முதல்  டிசம்பர் 2025 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 3 1/2 ஆண்டுகளில் ஆக்கிரமிப்பில் இருந்த 137. 95 ஏக்கர் நிலங்களும்,
8. 52 லட்சம் சதுர அடி காலியிடங்களும், 86 ஆயிரத்து 943 சதுர அடி கட்டிடப் பகுதிகளும் மீட்கப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூபாய் 1316 கோடி ரூபாய் ஆகும்.


கொற்றவை நீயூஸ் நிருபர் ,
திரு. ச. சந்திர மோகன்,
திண்டுக்கல் மாவட்டம்.