திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் தற்கொலை மிரட்டல்!!!

19 November 2025

திண்டுக்கல்:
   திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள ஜெ.புதுக்கோட்டையைச் சேர்ந்த லோகநாதன். இவர் வசிக்கும் பகுதியில் அரசால் கட்டப்பட்டு வரும் மினி ஸ்டேடியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ,உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி நின்று, இத்திட்டத்திற்கு தற்கொலை மிரட்டல் விடுத்து இத்திட்டத்திற்கு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார்.இச்சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் பதறியபடி செம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர்(பொறுப்பு) சுபத்ரா மற்றும் ஆத்தூர் (தாசில்தார்)வட்டாட்சியர் முத்து முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் லோகநாதனிடம் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி ,அவரது கோரிக்கையை விசாரிப்பதாக கூறி ,உயிரை பணயம் வைக்க வேண்டாம்! என்றும்  போராட்டத்தை கைவிடுமாறும்! எடுத்துரைத்துனர். அவர்களின் சமாதான பேச்சிற்கு பிறகே அவர் உயர் அழுத்த மின் கோபுரத்திலிருந்து பாதுகாப்பாக கீழே இறங்கி வந்து போராட்டத்தை கைவிட்டார்.இச்சம்பவம் செம்பட்டி மில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

கொற்றவை செய்தியாளர் ,
ச.சந்திரமோகன்,
திண்டுக்கல் மாவட்டம்.