திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியாசத்திரம் அருகே பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர்!!!

02 December 2025

திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக இருக்கும் இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக பழனி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமி தலைமையில் பழனி கோவிலில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் மற்றும் காவலர்களுடன் வந்துள்ளனர். இந்நிலையில் செய்திகளை சேகரிக்க திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் செய்தியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் வருகை புரிந்துள்ளனர். அப்போது இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமி  சிலருடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். அப்பொழுது செய்தியாளர்கள் கேள்வி கேட்கவே கோர்ட் உத்தரவு நகலை அங்கிருந்த செய்தியாளர்களின் முகத்தில் தூக்கி எரிந்துள்ளார். இந்நிலையில் பத்திரிகையாளர்களுக்கும்  இணை ஆணையர் லட்சுமிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது திடீரென பழனி கோவிலில் பணிபுரியும் காவலாளர்கள் செய்தியாளர்கள் மீது கொலைவெறி  தாக்குதலை நடத்தினர். அதுமட்டுமில்லாமல் தாக்குதல் நடத்திய காவலாளிகளை தடுக்காமல் ஒரு பட்சமாக இணை ஆணையர் செயல்பட்டார். இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக ரெட்டியார் சத்திரம் காவல் நிலையத்தில் முற்றுகை போராட்டம் மற்றும் நத்தம் ,வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் திண்டுக்கல் மாவட்ட பத்திரிகையாளர்கள்  மற்றும் செய்தியாளர்கள் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்து அனைத்துக் கட்சி பிரமுகர்களும் பத்திரிக்கையாளர்களுக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
 
ச. சந்திர மோகன்,
செய்தியாளர்,
திண்டுக்கல் மாவட்டம்.