திண்டுக்கல் ரயில் நிலையம் மறு சீரமைப்பு செய்து 22.71 கோடி ரூபாயில் தரம் உயர்த்தப்படுகிறது!!!
27 November 2025
திண்டுக்கல் மாவட்ட ரயில்வே நிலையம் மறு சீரமைப்பு செய்து தரம் உயர்த்தப்படுகிறது. கடந்த புதன்கிழமை திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு, தெற்கு ரயில்வே பொது மேலாளர் திரு.R.N சிங் அவர்கள் வருகை புரிந்தார். அப்போது திண்டுக்கல் ரயில் நிலையத்தின் புதிய கட்டமைப்பு, பயணிகளின் பாதுகாப்பு வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை மேற்கொண்டார். அவர் கூறியதாவது, திண்டுக்கல் ரயில் நிலையம்," அம்ரித் பாரத்" ரயில்நிலைய திட்டத்தின் கீழ் சுமார் 22.71 கோடி ரூபாய் செலவில் மறு சீரமைப்பு செய்து தரம் உயர்த்தப்படுகிறது. இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன பாதுகாப்பு மையங்கள், தோரண நுழைவு வாயில், முகப்பு கட்டிடங்கள், பயணியர் சீட்டு முன்பதிவு கட்டிடங்கள், மின்தூக்கி, குடிநீர் வசதிகள், ஆறு மீட்டர் அகலம் பயணிகள் நடைமேடை, மற்றும் பயணிகள் காத்திருப்போர் கூடம் ஆகியவை இதில் அடங்கும் என்று பத்திரிகையாளர்களிடம் அவர் தெரிவித்தார். கூட்ட நெரிசல்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ச.சந்திரமோகன்,
செய்தியாளர்,
திண்டுக்கல் மாவட்டம்.