திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக ரூ.117.75 கோடி செலவு
18 November 2025
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை முருகன் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக , கட்டணமில்லா சேவைகள் மற்றும் திட்டங்களுக்கு நான்கரை ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.117 கோடியே 72லட்சத்து 40 ஆயிரத்து 913 ரூபாய் செலவழிக்கபட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதில் பின்வருமாறு:
நாள் முழுவதும் அன்னதானம்,முடிக்காணிக்கை செலுத்துதல், முதலுதவி சிகிச்சை மையம், கிரிவீதி பக்தர்களுக்கு இலவச பொட்டலசாதம்,தங்கும் விடுதி, நீர் மோர், சுக்கு காபி,சித்த மருத்துவமணை, இலவச திருமணம், காலணி பாதுகாப்பு மையம், பேட்டரி கார் மற்றும் பஸ் வசதி, அன்பு இல்லம்,தவில் மற்றும் நாதஸ்வர கல்லூரி , பள்ளி மாணவர்களுக்கு இலவச உணவு, கழிப்பறை வசதிகள், வாகன நிறுத்துமிடம் பாதயாத்திரை பக்தர்களுக்கு உணவு வசதிகள் உள்ளிட்ட 23 இனங்களில் கீழ் இலவச திட்டங்கள் மற்றும் கட்டணமில்லா சேவைகள் செயல் படுத்தப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.