திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அருகே (லிஃப்ட் )மின் தூக்கி அருந்து விழுந்து தொழிலாளி பலி

14 November 2025

 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே காப்பிளியப்பட்டி பகுதியைச் பெருமாள் வயது (48) இவர் ஒட்டன்சத்திரம் டூ தாராபுரம் சாலையில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் கட்டுமான பொருட்கள் ஏற்றும்(லிஃப்ட் ) மின் தூக்கி இயக்கம் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக லிஃப்ட்மின் தூக்கி அருந்து மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்தில் உயிர் இழந்தார். இச்சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ச. சந்திரமோகன்
நிருபர்,திண்டுக்கல் மாவட்டம்.