திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம்,வேடபட்டி, நொச்சியோடைப்பட்டி ஆகிய பகுதிகளில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கார்த்திகை சுட்டி எனப்படும் மண் விளக்குகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இவர்கள் சாதாரண மண் விளக்குகள் மட்டுமின்றி 5 விளக்குகளை கொண்ட தாமரை விளக்கு,தட்டு விளக்கு, மொரம் விளக்கு, மேஜிக் விளக்கு, காமாட்சி விளக்கு, ஆரத்தி தட்டு விளக்கு போன்ற பல்வேறு டிசைன் விளக்குகள் தயாரித்து வருகின்றனர். இவர்களிடம் உள்ளூர் மற்றும் வெளியூர் மாவட்ட, மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் மொத்தமாக ஆர்டர் கொடுத்து விற்பனைக்காக வாங்கி செல்கின்றனர்.இந்த வருடம் விற்பனை படு ஜோராக உள்ளதாக விளக்கு செய்பவர்கள் தெரிவித்தனர்.
கொற்றவை நீயூஸ் செய்திகளுக்காக,
ச.சந்திரமோகன், திண்டுக்கல்.