மதுரை உயர் நீதிமன்றம் முன்பு...! போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை...!

28 November 2025

துரை உயர் நீதிமன்றம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது சிறப்பு காவல் படை வீரர் ஒருவர் துப்பாக்கியால் நெஞ்சில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.அவர் மதுரை மாவட்டம் ஏழுமலை கோட்டைப்பட்டியை சேர்ந்த மகாலிங்கம் ( 30) என்பது தெரிய வந்தது. அவர் கடந்த 2023 ஆம் ஆண்டு சிறப்பு காவல் படை பிரிவில் பணியில் சேர்ந்தார். இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்றம் முகப்பு பகுதி முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது யாரும் இல்லாத நிலையில் தன்னைத்தானே துப்பாக்கியால் நெஞ்சில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் அறிந்த உயர்நீதிமன்ற காவல் துறையினர் மகாலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கையில் ஒரு கடிதம் வைத்திருந்ததாகவும் அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தற்கொலைக்கான காரணத்தை விசாரித்து வருவதாகவும் விசாரித்த பிறகே அவர் தற்கொலை செய்து கொண்டது பணிச்சுமை காரணமா? அல்லது தனிப்பட்ட பிரச்சனையா? என்பது தெரியவரும் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொற்றவை நீயூஸ் நிருபர்,
திரு. ச.சந்திரமோகன்,
திண்டுக்கல் மாவட்டம்.