திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் மழை மற்றும் அடர் பனிப்பொழிவு காரணமாக எதிரே வருபவர்கள் யார் என்று தெரியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் காட்டு மாடுகள் குடியிருப்பு பகுதியில் உலாவி வருகின்றன. இது தெரியாமல் மூதாட்டி பாப்பா(60) என்பவர் வீட்டில் இருந்து வெளியே வரும் போது, காட்டு மாடு ஒன்று அவரை தாக்கியது இதில் பலத்த காயமடைந்த அவரைஅக்கம் பக்கத்தினர் கொடைக்கானல் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.சமீப காலமாக குடியிருப்பு பகுதியில் காட்டு மாடுகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதாகவும் அவைகள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்துவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.மக்கள் நலனை கருத்தில் கொண்டு இதை கட்டுப்படுத்த வனத்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கொற்றவை நீயூஸ் செய்தியாளர்,
ச.சந்திரமோகன், திண்டுக்கல்.