திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அருகே ரயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை!!!

30 November 2025

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ரயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர்.
 
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி வயது (38) இவருடைய கணவர் சந்தனக் குமார் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.சந்தனக்குமாரின் உறவினரான ஒட்டன்சத்திரம் பகுதி, சாலைப்புதூரை சேர்ந்த காளிமுத்து வயது (28) என்பவர் கணவரை பிரிந்து வாழும் ஜெயலட்சுமி வீட்டில் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் இருவருக்கும் திருமணம் மீறிய தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.இவர்களின் உறவுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்த நிலையில் இருவரும் அத்திக்கொம்பை அருகே கோயம்புத்தூரில் இருந்து மதுரைக்குச் செல்லும் ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து  தகவல் அறிந்த பழனி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திரு. ச.சந்திரமோகன்
கொற்றவை நீயூஸ் நிருபர்,
திண்டுக்கல் மாவட்டம்.