திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

12 November 2025

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அகரம் பகுதியைச் சேர்ந்த பரமன் மகள் நதி வர்ஷினி வயது 19 இவர் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார் . இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன், சார்பு ஆய்வாளர் சூர்யா கலா மற்றும் இதர காவலர்கள் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.