திண்டுக்கல் மாவட்டம் எரியோடு மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்த்த தனியார் மில் கூலி தொழிலாளி மோகன் வயது(42).இவர் அப்பகுதியில் உள்ள கல்குவாரியில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திண்டுக்கல் மாவட்ட தீயணைப்பு துறையினர், மோகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது கொலையா அல்லது தற்கொலையா அல்லது தவறி விழுந்தாரா போன்ற காரணங்களை திண்டுக்கல் மாவட்ட எரியோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர்:
ச.சந்திரமோகன்,
திண்டுக்கல் மாவட்டம்.