திண்டுக்கல்:
திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தீபக் என்பவர் ஆர் எஸ் ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார், அப்போது அங்கு வந்த காந்திஜி புதுரோடு பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் வயது (43 )ஆர் வி நகரைச் சார்ந்த அஜித் குமார் வயது (31) ஆகிய இரண்டு பேர் மது போதையில் உடைந்த பீர் பாட்டிலை தீபத்தின் கழுத்தில் வைத்து கொலை மிரட்டல் விடுத்து பயத்தை ஏற்படுத்தி அவரின் சட்டையில் இருந்த 500 ரூபாயை பறித்துச் சென்றனர்.பாதிக்கப்பட்ட தீபக் என்பவர் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய பகுதியில் புகார் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி, சார்பு ஆய்வாளர் சரத்குமார், மற்றும் இதர போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு நபர்களையும் கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
ச.சந்திரமோகன்
நிருபர், திண்டுக்கல் மாவட்டம்