காவல்துறை பணியில் உயிரிழந்த s.நித்யாவின் குடும்பத்திற்கு நிதியுதவி

15 November 2025

திண்டுக்கல்:

சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரிந்து உயிர்நீத்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முதல் நிலை காவலர்  S.நித்யா  குடும்பத்தினருக்கு அவருடன் 2011 ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் ஒன்றிணைந்து ரூ.25,56,000/- நிதி திரட்டினர். இதையடுத்து இன்று (14.11.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப  ரூ.25,56,000/- நிதியை காப்பீட்டு திட்டம் மற்றும் பணமாகவும் உயிர்நீத்த திருமதி S.நித்யா  குடும்பத்தினருக்கு வழங்கினார்கள். 

செய்தியாளர் :
ச.சந்திரமோகன்,
கொற்றவை நீயூஸ் 
திண்டுக்கல்.