திண்டுக்கல் மாவட்ட நகர் பகுதி, புறநகர் பகுதி, நத்தம் ஒட்டன்சத்திரம் சாணார்பட்டி ரெட்டியார்சத்திரம், பொன்னகரம் ஆத்தூர், சீலப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள வணிக கடைகள், சில்லறை வணிக கடைகள், மளிகை கடைகள் டீக்கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சட்ட விரோதமாக குட்கா,புகையிலை, பான் மசாலா போன்ற பொருட்களை விற்பனை செய்வது தெரிய வந்தது. அதில் எட்டு கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ₹ 25,000 வீதம் எட்டு கடைகளுக்கு 2 லட்சம் அபராதம் விதித்தனர்.இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் கடைகளின் உரிமையாளர்களுக்கு
கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
கொற்றவை நீயூஸ், செய்திகளுக்காக ,
நிருபர், திரு. ச. சந்திரமோகன் திண்டுக்கல் மாவட்டம்.