திண்டுக்கல் அருகே டிராக்டரை திருடிச் சென்ற வட மாநில இளைஞர்

13 November 2025

திண்டுக்கல் நத்தம் ரோடு பொன்னாகரம் பகுதியில், கேசவன் என்பவருக்கு சொந்தமான தண்ணீர் டிராக்டர் நிறுத்தி 
வைக்கப்பட்டிருந்த நிலையில் ,வட மாநில இளைஞர் ஒருவர் திருடி எடுத்துச் சென்றார்.


அதனைப் பார்த்த பொதுமக்கள் வட மாநில இளைஞரை துரத்தி சென்று, திண்டுக்கல் சிறுமலை அடிவாரம் பகுதியில் பிடித்து தர்ம அடி கொடுத்து, தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

  காவலர்கள் விசாரித்ததில், வடமாநில இளைஞர், பீகாரைச் சேர்ந்த அமலேஷ் யாதவ் என்பது தெரிய வந்தது. 

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ச.சந்திரமோகன் 
செய்தியாளர், திண்டுக்கல்.