திண்டுக்கல்: பழைய வத்தலகுண்டுவில் தேசிய ஊரக வேலையை (100 நாள்) முடித்துவிட்டு ரத்தினம் (55), பிச்சையம்மாள்(54), முத்து லட்சுமி (52) ஆகிய மூன்று பேரும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக, அதிவேகமாக வந்த ஆட்டோ ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியது . இதில் மூதாட்டி ரத்தினம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த பிச்சையம்மாள், முத்து லட்சுமி ஆகிய இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு வத்தலகுண்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இச்சம்பவம் அறிந்த உறவினர்கள் விபத்துக்கு காரணமான ஆட்டோ டிரைவரை உடனடியாக கைது செய்ய வேண்டுமென்று ,காவல் நிலையம் முன்பு பொது மக்களுடன் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு!!! ஏற்பட்டது.
கொற்றவை நீயூஸ்
செய்தியாளர்,
ச.சந்திரமோகன், திண்டுக்கல்.