ஆயுள் முழுவதும் ஆரோக்கியம்: சர்க்கரை நோய் அண்டாமல் தடுப்போம்!

27 December 2025

நீரிழிவு நோய் அதாவது சர்க்கரை வியாதி இது தற்போது அதிகபட்சமாக அனைவருக்கும் இருந்து வரும் ஒரு நோயாக மாறிவிட்டது. இதற்கு காரணம் நம் உணவு முறை பழக்க வழக்கங்கள் தான்.

தற்போது இருக்கும் காலகட்டத்தில் நம் உணவு முறைகளை கவனத்தில் கொண்டு உண்ணும் நிலையில் தற்போதைய தலைமுறையினர் இல்லை. இது குறித்த விழிப்புணர்வு அதிக பேருக்கு தெரிவதில்லை. எனவே விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் அவ்வப்போது நம் உடல் மற்றும் நாம் உண்ணும் உணவில் கவனம் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

அவ்வாறு இருக்கும் போது சர்க்கரை வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். 

அதன்படி சர்க்கரை வியாதியை வராமல் தடுக்க பல்வேறு வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது...


தினமும் 20 நிமிடங்கள் அல்லது 30 நிமிடங்கள் வேகமான நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்

மேலும் நொறுக்கு தீனி அடிக்கடி சாப்பிடுவதை நாம் குறைத்துக் கொள்ள வேண்டும். மொத்தமாக நிறுத்திவிட்டால் மிகவும் நல்லது. 

மேலும் அரிசி சர்க்கரை மைதா சாதம் தேங்காய் பால் உள்ளிட்ட வெள்ளை நிற உணவு பொருட்களை தவிர்த்தால் சர்க்கரை நோய் நம்மை நெருங்க முடியாமல் தவிர்க்கலாம்.

குறிப்பாக நாம் அவ்வப்போது வெந்தயத்தை எடுத்துக் கொண்டால் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தடுக்கும். 



அரிசியை குறைத்துவிட்டு சிறுதானிய உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது நம் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருப்பதுடன் நமக்கு எதிர்ப்பு சக்தி மற்றும் பல்வேறு பலன்கள் இதன் மூலம் நமக்கு கிடைக்கின்றது...

வேகமாக சுழன்று வரும் இந்த நவீன உலகில் இவற்றில் ஏதாவது சிலவற்றையாவது நாம் பின்பற்ற முயற்சிப்பது ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும்....