உளுந்தூர்பேட்டை அருள்மிகு காமாட்சி அம்மை சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் தனுர் மாத மார்கழி மகா பிரதோஷம்...

17 December 2025

இருள் நீக்கி இன்பம் நல்கும் அம்மையப்பர் அருள்மிகு காமாட்சி அம்மை சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் தனுர் மாத மார்கழி மகா பிரதோஷம்...


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை  அருள்மிகு காமாட்சி அம்மை சமேத ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயிலில் தனுர் மாத மார்கழி மகா பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கோவிலில் உள்ள நந்திக்கு பால் தயிர் பன்னீர் திருமஞ்சனம் மஞ்சள் விபூதி சந்தனம் இளநீர் பழச்சாறு தேன் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து நந்திக்கும் ஸ்ரீ கைலாசநாதருக்கும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது 
தொடர்ந்து நந்தி வாகனத்தில் சுவாமி கோவில் சன்னதியில் உள்ள பிரகாரத்தை சுற்றி வந்தது.

நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது...


இரா.வெங்கடேசன, சப்எடிட்டர், கொற்றவை நியூஸ்