டி.ஜி.பி. நியமனம்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

12 February 2026

தமிழகத்திற்கான புதிய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யை நியமிப்பதற்கான பெயர்கள் அடங்கிய பட்டியலை ஒரு வார காலத்திற்குள் மத்திய பொதுப்பணி ஆணையத்திற்கு (UPSC) பரிந்துரை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ஏற்கனவே பொறுப்பு டி.ஜி.பி. நியமனம் தொடர்பாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொறுப்பு டி.ஜி.பி. நியமனம் என்பது தவறானது என்றும், நிரந்தர டி.ஜி.பி.யை நியமிப்பதற்கான விதிகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தினர்.


தமிழக அரசின் பரிந்துரை கிடைத்த இரண்டு வாரங்களுக்குள் தகுதியானவர்களின் பெயர்களை இறுதி செய்து அனுப்பி வைக்க வேண்டும் என UPSC அமைப்பிற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டி.ஜி.பி.யாக தேர்வு செய்யப்படுபவர் குறிப்பிட்ட பிரிவுகளில் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்ற விதியானது தமிழகத்திற்குத் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
டிஜிபி நியமன விவகாரம்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
இந்த வீடியோ தமிழக டிஜிபி நியமன விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது குறித்த கூடுதல் விவரங்களை வழங்குகிறது.