பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118 வது குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து மதுரையில் முத்துராமலிங்க தேவரின் திருவருவ சிலைக்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நம்முடைய நாட்டின் விடுதலைக்காக தன்னையே ஒப்படைத்துக் கொண்டு உழைத்திருக்கும் முத்துராமலிங்க தேவர் திருமகனார் நினைவிடத்தில் இன்று மரியாதையை செலுத்தி இருக்கிறோம் என்று தெரிவித்தார். மேலும் புதிதாக பசும்பொன்னில் ஒரு திருமண மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தற்போது வந்திருக்கிறது அந்த கோரிக்கையை உடனடியாக ஏற்று மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேவர் பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.