டெல்லி செங்கோட்டை அருகே இன்று மாலை கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனைத் தொடர்ந்து அந்தக் கார் வெடித்து சிதறியது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த மக்கள் கார் வெடித்ததும் அலறி அடித்து தப்பி ஓடினர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கார் வெடித்ததற்கான காரணம் குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.