நாட்டின் தலைநகர் டெல்லியில் பல ஆண்டுகளாக காற்றின் தரம் மோசமாக நிலவிவரும் நிலையில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மோசமாகவே நீடித்து வருகிறது. இந்த காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த அரசுகள் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வரும் போதிலும் இன்று காற்றின் தர குறியீடு 305 என்ற அளவில் உள்ளது. மிகவும் மோசமான அளவீடு ஆகும். இதனால் பொதுமக்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.