டெல்லி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: இரண்டு பேர் உயிரிழப்பு

31 December 2025

டெல்லி ஷாதரா நகர் சிவபுரி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று மதியம் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

இந்த பயங்கரமான தீ விபத்தில் 75 வயதுடைய பிரேம்சாகர் மற்றும் அவருடைய மனைவி ஆஷா ஆகிய இருவரும் சிக்கிக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். மீட்கப்பட்ட தம்பதியினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்..

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்...