திண்டிவனம்: திண்டிவனம் அருகே மாயமான முதியவர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
23 October 2025
திண்டிவனம்: திண்டிவனம் அருகே மாயமான முதியவர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
திண்டிவனம் அடுத்த கொள்ளார் காலனியை சேர்ந்தவர் மாணிக்கம், 70; சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த 20ம் தேதி மதியம் வீட்டில் இருந்த அவரை காணவில்லை. இந்நிலையில், நேற்று அதே பகுதியை சேர்ந்த முருகன், 47; என்பவர் தனது நிலத்திற்கு சென்றபோது, அங்குள்ள கிணற்றில் மாணிக்கம் இறந்த நிலையில் மிதந்தார்.ரோஷணை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
-செய்தியாளர்
ஆ.ஆகாஷ், விழுப்புரம்