விழுப்புரம்: சொத்துக்காக தந்தையைக் கொன்ற மகள்!

12 November 2025

விழுப்புரம்: சொத்துக்காக தந்தையைக் கொன்ற மகள்!


புதுச்சேரி மாநிலம் திருபுவனை பகுதியைச் சேர்ந்தவர் கலிவரதன்(73). இவர் கடந்த நவ.9ஆம் தேதி வானூர் தாலுகா, விநாயகபுரம் சுடுகாடு அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மனைவி ருக்மணி வானூர் போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, விசாரணையில் சொத்துக்காக வளர்ப்பு மகள் லதா, அவரது கணவர் சக்திவேல் ஆகியோர் இணைந்து சொத்திற்காக கொலை செய்தது தெரியவந்ததும் அவர்களை கைது செய்தனர்.

செய்தியாளர் 
ஆ.ஆகாஷ், விழுப்புரம்