வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு இல்லை: மத்திய பெட்ரோலியத்துறை விளக்கம்
13 March 2026
ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான போர் பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய பெட்ரோலியத்துறை இணைச் செயலாளர் சுஜாதா ஷர்மா, நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்தில் எந்தவித தட்டுப்பாடும் இல்லை என்று உறுதிப்படத் தெரிவித்துள்ளார். வதந்திகளை நம்பி பொதுமக்கள் தேவையற்ற பதற்றத்துடன் சிலிண்டர்களை முன்பதிவு செய்யவோ அல்லது வாங்கக் குவியவோ வேண்டாம் என்றும், வீடுகளுக்கு வழங்கப்பட வேண்டிய சிலிண்டர்கள் வழக்கம்போல் தடையின்றி விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கவும் விநியோகத்தை விரிவுபடுத்தவும் பெட்ரோலியத்துறை தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், குறிப்பிட்ட பகுதிகளுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அவர் தனது பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார்.