தமிழகத்தில் 20,000 கடந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை!

03 May 2021

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 20,768 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 153 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.


தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,20,444 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து இன்று 17,576 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா காரணமாக ஒரேநாளில் 153 பேர் இறந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,346ஆக உயர்ந்துள்ளது.